Wlts_header1

மேற்கு இலண்டன் தமிழ் பாடசாலை பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும்!

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, அனைத்து உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக இணையவழிக்கல்விக்கு மாறவேண்டிய கட்டாயத்திற்கு நாம் எல்லோரும் இந்நாள்களில் தள்ளப்பட்டுள்ளோம். ஆகவே தற்காலிகமாக இணையவழி ஊடாக மாணவர்களுக்கு அனைத்து வகுப்புக்களையும் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். 43வது வருடத்தில் எமது "மேற்கு இலண்டன் தமிழ்ப் பாடசாலை" 05.09.2020 அன்று ஆரம்பமாகின்றது என்பதனை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். எமது பாடசாலையின் நேர அட்டவணைக்கு ஏற்ப பாடங்கள் அனைத்தும் 05.09. 2020 அன்று காலை 9.00 மணிக்கு zoom ஊடாக ஆரம்பமாகின்றது. அனைத்தும் பாடங்களும் இணையவழி ஊடாக கற்பிக்கப்படும் என்பதனை அறியத்தருகின்றோம். நுண்கலைப்பாடங்கள்: பரதநாட்டியம், சங்கீதம், வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் சுரத்தட்டு (Western & Clasical) ஆகிய பாடங்கள் zoom ஊடாக முற்பகல் (11.00 - 13.40) வரையும், யோகா பயிற்சி வகுப்பு zoom ஊடாக (மாலை 7.00-8.00 மணிவரை) நடைபெறுகின்றது என்பதனையும் இந்த வேளையில் அறியத்தருகின்றோம்.

மேலதிக விபரங்களுக்கு

இலத்திரன் தபால் secretary@wlts-ofaal.org.uk

தொலைபேசி 07545839574

தலைமை ஆசிரியர் Dr இராசையா - 07949647515

நன்றி

ஆளுநர் சபை

Cambridge Syllabus



FINE ARTS

School Policy Documents

Bamini Tamil Font